இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> போற்றி நிற்பேன் <>
தென்புலியூர் வாழ்துரைநின் செங்கமலத் திருவடியைச்
.. சேர்ந்தோரின் குறைகளைநீ
தீர்த்திடுவா யெனக்கேட்டிங்
கென்வகைக்கு நானுமென்ற னிழிநிலையை
வகைப்படுத்தி
… யெழுதியுன்றன் முனமியம்ப வெடுத்திடுமந்
நேரத்தைப்
பொன்னவையி லடியர்முனம் புன்னகையோ டாடுமுன்றன்
… பொற்பிலுள முருகியுனைப் போற்றுதலிற்
கழிப்பேனேற்
பின்னுமிந்தப் பிறப்பிறப்புச் சுழலினில்பட்
டுழலாமற்
.. பேரின்ப நிலையிலென்றும் பேராம லிருப்பனன்றே.
பதம்
பிரித்து:
தென்புலியூர் வாழ்துரைநின் செங்கமலத்
திருவடியைச்
.. சேர்ந்தோர்தம் குறைகளைநீ
தீர்த்திடுவாய் எனக்கேட்டிங்(கு)
என்வகைக்கு நானுமென்றன் இழிநிலையை
வகைப்படுத்தி
… எழுதியுன்றன் முனம்இயம்ப எடுத்திடும்அந்
நேரத்தைப்
பொன்னவையில் அடியர்முனம்
புன்னகையோ(டு) ஆடுமுன்றன்
… பொற்பில்உளம் உருகியுனைப்
போற்றுதலில் கழிப்பேனேல்
பின்னுமிந்தப் பிறப்பிறப்புச் சுழலினில்பட்
டுழலாமல்
.. பேரின்ப நிலையிலென்றும் பேராமல்
இருப்பனன்றே.
(பேராமல் – பெயராமல், விலகாமல்.)
….. அனந்த் 10-1-2025
No comments:
Post a Comment