திருச்சிற்றம்பலம்
புன்மதியைப் புனைசடையோய் புரக்கவொரு தகுதியிலாப்
.. புன்மதியேன் தன்னையுமோர் பொருளாக்கிப் புவிவாழ்வின்
தன்மையையான் உணரவைத்துத் தலைவபர கதியளிக்கும்
.. தாளிணைக்கீழ் நிற்கவைத்த தயவினையின்(று)
.. தாளிணைக்கீழ் நிற்கவைத்த தயவினையின்(று)
அன்னையவள் உடனிருக்க அம்பலத்தில் நடமாடும்
.. அண்ண லுன்றன் முன்னின்று அடியவனேற்(கு) இயன்றவரைச்
.. அண்ண லுன்றன் முன்னின்று அடியவனேற்(கு) இயன்றவரைச்
சொன்மலரால் அருச்சிக்கத் துணிந்துவந்தேன் ஏற்றிடுவாய்
.. தூயபெரு வெளியினிலே துலங்கிடுமெய்த் தத்துவனே.
.. தூயபெரு வெளியினிலே துலங்கிடுமெய்த் தத்துவனே.
(புன்மதி - குறைவுள்ள நிலா; [புன்மதி யுடைய வென்மனப் பாறையை
நற்பதப் படுத்தி யற்புதம் விளைக்கும்- திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம்; புன்மதியேன் - குறைந்த அறிவுடைய யான்.)
No comments:
Post a Comment