Monday, August 25, 2003

ஆடுவனே - August 25 2003

சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

பிரதோஷப் பாடல்

<> ஆடுவனே <>


என்மனை என்பொருள் என்றென்னைநீ - உன்றன்
... ஏமாற்று வித்தையால் எண்ணவைத்தாய்

உன்திறம் யாவும் உணர்ந்தறிந்தேன் - அந்த
...உண்மை புரிந்தபின் ஓர்கணத்தில்

தன்னை யறியாத தற்குறியாய் - வாழ்ந்த
...தன்மை மறைந்தது தாண்டவனே!

பொன்மய மன்றில்நீ ஆடுகையில் - அங்குப்
.. போயினி நானும்சேர்ந் தாடுவனே!


..அனந்த் 25-8-2003