திருச்சிற்றம்பலம்
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> ஆடி(க்) காட்டினாய் <>
ஆடிப் புவியெலாம் ஆக்கிப் புரந்தும்
...அழித்தும் கரந்தும் அருளு(ம்)உனைத்
தேடித் தரிசனம் காணத் தலங்கள்
...செல்ல இயலா திருந்தவெனை
நாடிப் பரிந்(து)என(து) உளத்துள் நித்தம்
...நடம்நீ புரிதல் காணு(ம்)வணம்
...நடம்நீ புரிதல் காணு(ம்)வணம்
ஆடி ஒன்றையென் உள்ளே காட்டி
...ஆண்ட விதமோர் விந்தை யன்றே.
(ஆடி=கண்ணாடி; எழுசீர் விருத்தம்.மா விளம் மா மா - மா மா காய் என்ற வாய்பாடு.)...ஆண்ட விதமோர் விந்தை யன்றே.
..அனந்த்
23-2-2013