திருச்சிற்றம்பலம்
<> என்
மகிழ்ச்சி <>
மலையு முண்டு
பனியு முண்டு மங்கை உடலில் பாதி உண்டு
... மகிமை வாய்ந்த
மைந்தர் உண்டொர் அணியாகக்
கலைகு றைந்த
மதியு முண்டு கங்கை தலையில் அலைவ துண்டு
.. கணங்கள் உண்டு படையு முண்டிங்(கு) இவையோடு
தலைகள் ஐந்து
தாமு முண்டு தாவி ஏற விடையு முண்டு
.. சததம் ஆடச்
சதிரு முண்(டு)இவ் விதமான
நிலையில் இந்த
நீசன் பாலும் நேச முண்டி வர்க்(கு)என் றெண்ணி
.. நிதமும் அந்த
நினைவில் நீந்தி மகிழ்வேனே.
(சததம்= எப்பொழுதும்; சதிர் = நாட்டிய சபை; பதின்மூன்று
சீர் ஆசிரிய விருத்தம், வாய்பாடு: 1, 9 சீர்கள் புளிமா, மற்றவை மாச்சீர், இறுதிச்சீர்
புளிமாங்காய்; )