இன்று பிரதோஷ நன்னாள்.
(பதினான்கு சீர் விருத்தம். அரையடி வாய்பாடு: புளிமாங்காய், மா, காய், மா, காய், மா, புளிமா)
திருச்சிற்றம்பலம்
<> பிணிக்கு மருந்து <>
(பதினான்கு சீர் விருத்தம். அரையடி வாய்பாடு: புளிமாங்காய், மா, காய், மா, காய், மா, புளிமா)
நிலையாத இந்த நெடுமேனி தன்னை நிலையாக்க எண்ணி மனிதர்
.. நிரையாக நித்தம் அலைபோலத் தம்முள் வருநோயை நீக்கு விதமாய்க்
கலையாவும் பேணிக் கணந்தோறும் நூறு வகையான பேர்கொள்
மருந்தைக்
.. கடிதாகக் கொண்டு வருவார்உ டம்பு குணமான பின்னும்
மனத்தின்
அலைபாயும் தன்மை தொலையாமல் தொல்லை உறு(ம்)வேளை எந்த வகையில்
.. அதைநீக்கு வோமென்(று) அறியாமல் வாடி அழியாதி ருக்கக் கயிலை
மலைமீது ஞான மருந்தாய்இ லங்கும்
மாதேவன் தாளை நினைக்கில்
.. மறுசன்ம மென்னும் பிணிநீங்கி என்றும் மறையாத இன்பம் உறுமே.
... அனந்த்
21-10-2014