திருச்சிற்றம்பலம்
<> இணையில்லான் <>
பொங்கும் அன்போ டடியார் மனத்தில்
... புகுந்தே அவரைத்தன்
......பொன்னார் வடிவோ டிணையச் செய்யும்
........புனிதன் இவன்முன்னாள்
அங்கை குவித்(து)என் அரனே காவென்(று)
... அரற்றிக் கண்ணீரால்
.......ஆட்டித் துதித்த மணிவா சகரை
..........ஆண்டான் உளமிரங்கிச்
சங்கம் தனிலே தனியோர் செயுளைத்
... தருமிக் கெனவரைந்தான்
.... தன்னைச் சார்ந்தோர்க் கருளைப் பொழியும்
.... தகையோன் துணைவியுடன்
...இலங்கும் எழில்காணில்
.....எங்கும் இவன்போல் இறைவன் இலையென்(று)
.......எவர்தாம் உரையாரே?
(மஹாசிவராத்திரியை ஒட்டிய பிரதோஷச் சிறப்பு நன்னாள்.)