திருச்சிற்றம்பலம்
<> சந்திக்கும்
வேளை <>
ஆட்டம்
ஆடுவைநீ அம்பலத்தில் அடியேன்போர்
.. ஆட்டம்
புரிந்திடுவேன் அவனியில்;உன் அன்பர்களின்
பாட்டில் மகிழ்வாய்;நீ பாவம்நான் பலவாயென்
.. பாட்டில்
குவித்திடுவேன், பரமேசா! மெய்யடியார்
கூட்டில்
களிப்பாய்நீ; நான்குடும்பம் என்னுமொரு
.. கூட்டில்
அடைபடுவேன்; கும்பலுடன் தனிக்கூத்தைக்
காட்டில்
பயில்வாய்;என் கால(ம்)வரும் வேளையிலே
.. காட்டில்
துயில்வேன்நான் கண்டுகொள்நீ ஆங்(கு)எனையே!
..அனந்த் 12-8-2015