திருச்சிற்றம்பலம்
(14-சீர் விருத்தம்; அரையடி: கூவிளம் விளம் விளம் விளம் விளம் மா தேமா)
<> அலகிலாக் கூத்தன் <>
மாமியார் தொல்லையில் லாததோர் மனையென மனமகிழ்ந் திரண்டு மாதர்
…மணம்புரிந் தொருத்திஉம் உடலிலே பாதிமற் றொருத்திஉம் தலையி லேற
ஆமிது தாங்கவொண் ணாதென ஐய!நீர் ஆங்கொரு ஓட்டை யேந்தி
…ஆனின்மீ தேறியே ஊரெலாம் அனுதினம் ஊணிரந் துண்டு வாழும்
சாமியா ராயினீர் என்றுமைச் சகத்தினர் பரிகசம் செய்வ தைநீர்
…சட்டைசெய் யாமலே திரிவதன் காரணம் அவரெலாம் அறிய மாட்டார்
யாமெம தென்னுமோர் மாயையில் யாண்டுமே சிக்கிடா ப் பரம மாம்உம்
.. அலகிலாக் கூத்தினை ஆன்றமெஞ் ஞானியர் மட்டுமே அறிகு வாரே!
..அனந்த்
23-11-2015