திருச்சிற்றம்பலம்
<> பற்றினேன் <>
உருவமொன் றிலாமலோர் அருவமாய் நின்றநீ
..உலகுளோர்
காண வேண்டி
…உளங்கவர்
வடிவமொன் றேற்றதன் மாண்பினில்
….உவகைநான்
கொண்டு நிற்க
ஒருபுறம் உனைமணம் புரிந்தவள் தனதென
..உரிமையோ
டெடுத்த பின்னர்
…உன்சிரம்
தன்னைஓர் மங்கையும் கொண்டிட
….உடலையும்
பாம்பு மூட
இருபதம் தம்மையுன் அடியவர் துணையென
..இறுக்கமாய்ப் பற்ற, இன்னும்
…இருப்பதுன் உருவினில் ஏதென இங்குயான்
….எண்ணியே திகைத்த காலை
ஒருவரும் அறிந்திடா வண்ணமாய் ஐய!நீ
..ஒளிந்தென தருகில் வந்தென்
...உள்ளமாம் வெளியினில் உன்உரு அனைத்தையும்
….ஒருங்கயான் பற்ற வைத்தாய்!
(ஒருங்க = ஒன்றாகச் சேர்த்து)
..அனந்த்
23-12-2015