திருச்சிற்றம்பலம்
<> சரியாமோ? <>
தங்கத் தலமும்* தவறா துணவும் தந்துஉம் தேவை எல்லாமும்
… தானே பார்த்துத் தரவோர் மங்கை உம்மோ டொட்டி இருக்கையிலே
அங்கும் இங்கும் ஆனொன் றேறி அலைந்(து)ஊர் ஊராய் நாடோறும்
… அன்னம் தேடி இரந்தே உண்ண ஆசை நீர்தாம் கொண்டீரேல்
இங்(கு)உம் அருளால் இல்லம் நடத்தி இறைஉம் நினைவில் அகலாமல்
… இருக்கும் அடியார்க் கீவ தற்(கு)உம் பாலே துண்டென் றறியேன்யான்
சங்கம் முழங்கத் தாரை ஒலிக்கத் தாத்தை என்றே நடமாடும்
… சத்தத் தினிலென் சந்தே கத்தை மறக்கச் செய்தல் சரியாமோ?
(*பார்வதியம்மை தான் வசித்துவந்த இமயமலையில் தன் கணவரும் வசிக்குமாறு ஏற்பாடு செய்ததாகத் தற்குறிப்பேற்றம். 14-சீர் ஆசிரிய விருத்தம்; அரையடி: தேமா+ 5 மா + காய்.)
அனந்த் 22-9-2018 சனி மஹாப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.