திருச்சிற்றம்பலம்
<> வாய்ப்பருள்வாய் <>
கள்ளம் சிறிதுமிலாக் கணக்கற்ற அடியார்கள்
.. கனகசபை நாதனுன்றன் களிநடனம் தனைப்பருகி
உள்ளம் நெகிழ்ந்தவர்
உகுக்கும்நீர் உள்தெரியும்
.. உன்னுருவின் பிம்பத்தை யேனும்கண் டுருகியின்ப
வெள்ளத்துள் ஆழ்ந்திடநல் வினையேதும் செய்யாஇவ்
.. வீணனுக்கும் ஒருவாய்ப்பை வழங்கிடநீ கருதாயோ?
துள்ளும் நடம்காட்டித் துரியநிலை ஈதென்று
.. சொல்லாமற்
சொல்லிநிற்கும் தூயபர தத்துவமே.
அனந்த் 28-10-2020