திருச்சிற்றம்பலம்
அழுகின்றேன் ஐயாநின் அருளறியா
… தஞ்ஞானக் குழியின் னுள்ளே
விழுகின்றேன் வாணாளை வீணாளாய்
.. வெறும்சடமாய் வினையாம் வித்தை
உழுகின்றேன் இனித்தாங்கேன் உலவுவிடை
.. உடையானுன் தாளில் வீழ்ந்து
தொழுகின்றேன் கதறுகிறேன் என்துயரைத்
.. துடைத்தருளாய் தில்லை வேந்தே.
(வித்தை = விதையை.)
****
கூளம் பெருக்கிக் குவித்துவைத்துக்
.. கும்பிட் டுழலும் என்மனத்தால்
நாளும் நானிங் குறுதுன்பம்
.. நாயும் உறாதென் நாயக!உன்
தாளென் உளத்தில் இருத்துவையேல்
… தழலில் இட்ட சரகாகத்
தூளாய்த் துன்பம் சிதறாதோ
.. சொல்லாய் தில்லைப் பெருமானே.