இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> காத்திடுவாய் <>
அழுக்கு நெஞ்சினன் அடிக்கடி யுன்றன் நினைப்பினின்று
வழுக்கி மண்ணிதன் மயக்கெனும் குழியுள் விழுந்திடுங்கால்
இழுக்கிப் பாவியைப் புரத்தலென் றெண்ணா தெனக்கருள்வாய்
கழுக்குன் றத்துறை கடவுளுன் கரத்தை நீட்டியின்றே.
*************
<> என் பேறு <>
வாக்கால் வழுத்தியுன தாட்கீழ் வந்தடையும் அடியவர்க்குத்
தூக்கிப் பதமலரைக் காட்டித் துரிசகற்றும் தூயனுனைப்
பார்க்கும் வகையளித்த பேற்றை எண்ணிநிதம் பாவியன்யான்
போக்கு வேனெனது வாழ்வில் மிஞ்சியஎன் பொழுதினையே
… அனந்த் 30-7-2023