உண்டுடுத் துறங்கி உலகினில் உழன்றிங்(கு)
.. ஒடுங்கவோ நாயினேன் பிறந்தேன்?
கண்டதே மெய்யாய்க் கருதிவாழ்ந் தலந்தேன்
.. கயவர்தம் கூட்டிலே உழன்றேன்
பண்டுநாள் என்போல் பாவியர் தமக்குப்
.. பரிந்துநீ அருளிய தறிந்தேன்
தண்டனிட் டின்றுன் தாளினில் விழுந்தேன்
.. தள்ளிடின் உயிர்தரிக் கிலனே.
(அலந்தேன் = வருந்தினேன்.)
…… அனந்த் 30/31-8-2024