இன்று பிரதோஷ நன்னாள்.
<> கறுப்புப் பணக்காரன் <>
காசுபண மில்லான்போல் கையில் தலையோட்டைக்
கூசாமல் ஊரார்முன் கொண்டிரக்கும்
- ஈசன்
கரும்பணத்தைக் கச்சையிலே கட்டியுள்ளான் என்றிங்(கு)
ஒருவருங்கா ணாததே னோ?
(பணம் = காசு,
பாம்பு; கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க- திருவாசகம்,
திருவண்டப் பகுதி)
15-10-2024