திருச்சிற்றம்பலம்
<> கூடும் வெளியும் <>
பிறந்த நாள்தொட் டின்றுவரை
.. பேதை என்றன் மனப்பறவை
பறந்து செத்தை பலசேர்த்துப்
.. படைத்த எண்ணக் கூட்டிலுன்னை
மறந்து கிடந்த எனையெழுப்பி
.. வாவென் றழைத்துன் அருளொளிசேர்
திறந்த வானில் திளைக்கவைத்தாய்
... திரும்பேன் இனியென் கூட்டினுக்கே.
... அனந்த் 3-8-2013
============
<> கூடும் வெளியும் <>
பிறந்த நாள்தொட் டின்றுவரை
.. பேதை என்றன் மனப்பறவை
பறந்து செத்தை பலசேர்த்துப்
.. படைத்த எண்ணக் கூட்டிலுன்னை
மறந்து கிடந்த எனையெழுப்பி
.. வாவென் றழைத்துன் அருளொளிசேர்
திறந்த வானில் திளைக்கவைத்தாய்
... திரும்பேன் இனியென் கூட்டினுக்கே.
============
இனிய பாடல்.
பறவை, கூடு, போன்ற சொற்கள் ஒரு திருவாசகப் பாடலை ஞாபகப்படுத்தின!
http://www.thevaaram.org/ thirumurai_1/songview.php? thiru=8&Song_idField=81150& padhi=15&startLimit=14& limitPerPage=1&sortBy=& ampsortOrder=DESC
http://www.thevaaram.org/
8.15.14 - திருவாசகம் - திருத்தோணோக்கம்-14:
உரைமாண்ட உள்ளொளி உத்தமன்வந் துளம்புகலும்
கரைமாண்ட காமப் பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித் தோணோக்க மாடாமோ.
கரைமாண்ட காமப் பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித் தோணோக்க மாடாமோ.
வி. சுப்பிரமணியன்
No comments:
Post a Comment