இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> இடம் தந்த காரணம் <>
அன்னை உமைக்குன் இடப்பாகம்
..அளிக்கத் தூண்டிய காரணத்தை
…..அடியேன் அறிவேன் அன்றொருநாள்
…....அவையோர் முன்பு நாட்டியத்தில்
..அளிக்கத் தூண்டிய காரணத்தை
…..அடியேன் அறிவேன் அன்றொருநாள்
…....அவையோர் முன்பு நாட்டியத்தில்
தன்னை விஞ்சும் தகைமையளாய்த்
..தையல் இருந்த துணர்ந்துன்றன்
…..தாளைத் தலைமேல் தூக்கிநின்ற
…....சதியை அறிந்தும் பின்னொருநாள்
..தையல் இருந்த துணர்ந்துன்றன்
…..தாளைத் தலைமேல் தூக்கிநின்ற
…....சதியை அறிந்தும் பின்னொருநாள்
இன்னல் விளைக்கும் நஞ்சுண்ண
…ஈசன் நீயும் துணிகையிலே
…..இல்லாள் அவளுன் உடலுள்விடம்
…....இறங்கா வண்ணம் காத்ததன்பின்
…ஈசன் நீயும் துணிகையிலே
…..இல்லாள் அவளுன் உடலுள்விடம்
…....இறங்கா வண்ணம் காத்ததன்பின்
இன்னும் இதுபோல் சங்கடங்கள்
..எழுங்கால் எல்லாம் தீர்த்துவைக்க
…..என்றும் அகலா துன்னிடத்தில்
…....இருத்தி வைத்தாய் அன்னையையே!
..எழுங்கால் எல்லாம் தீர்த்துவைக்க
…..என்றும் அகலா துன்னிடத்தில்
…....இருத்தி வைத்தாய் அன்னையையே!
படம்: திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட “நடராசப் பெருமான்”
நூலிலிருந்து , நன்றியுடன். படத்தை வரைந்தவர் பேர்பெற்ற சிற்பியான திரு.
கணபதி ஸ்தபதி என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்க.)