<> தில்லைத்
தரிசனம் <>
தில்லைத்
தலத்தினைச் சேரும் வெறியுடன்
.. சென்மம் முழுவதுங் காத்திருந்தேன் -அங்கே
எல்லையில்
லாததோர் இன்பவெளியினில்
.. ஈசன் நடமாடக் கேட்டிருந்தேன் 1
தொல்லை
தரும்பவ நோயோர் நொடியில்
.. தொலையுமங் கேயெனச் சொன்னதனால்- என்னுள்
அல்லும்
பகலும்அச் சேத்திரத்தைக் காணும்
.. ஆவல் எனைஉந்த முன்பெயர்ந்தேன் 2
ஓரடி
முன்னம் எடுத்துநான் வைக்குமுன்
.. ஓடியங் கேஐவர் வந்தனரே
தேரடி
சிக்கிய சிற்றெரும் பாக்கியென்
.. சித்தம் சிதைக்க முனைந்தனரே 3
நாட்டமுடன்
அந்த நட்டம் பயின்றிடும்
.. நாதனைக் காணஎன் உள்ளத்திலே
கூட்டி
வைத்த என்றன் ஆசையெல்லாம் - அவர்
.. குப்பையில் கொட்டத் துணிந்தனரே 4
வாட்டியென்
னையவர் பாதையிலே காலை
..வைக்கப் பணித்திட்ட வேளையிலே
கூட்டிக்கை
கும்பிட்டுக் கோனைத் துணைசெய்யக்
..கூப்பிட நெஞ்சம் மறந்ததுவே 5
முன்னைப்
பிறவியின் புண்ணியமோ இல்லை
.. முந்தையர் நல்வினைத் திண்ணியமோ - ஒரு
மின்னலைப்
போலொரு வெள்ளை விடையொன்று
..விண்ணி லிருந்து விரையக் கண்டேன் 6
அன்னை
ஒருபால் அமர்ந்திருக்க அந்த
.. ஐயன் முகத்தில் முறுவலுடன் - அழும்
என்னை
விளித்தென்றன் பக்கம் நெருங்கிடல்
...என்றன் பகைவர்கள் பார்த்தனரே 7
ஆதவன்
முன்னே அகலும் பனிபோல
.. ஐவரும் தேய்ந்து மறைந்தனரே - என்றன்
காதல்
கனவு பலித்திட வேண்டிநான்
...கைகளைக் கூப்பித் தொழுதுநிற்கத் 8
...கைகளைக் கூப்பித் தொழுதுநிற்கத் 8
தத்திமித்
தாவென்ற தாள லயத்தினில்
...சங்கரி யோடந்த சாம்பவனும்
...சங்கரி யோடந்த சாம்பவனும்
நர்த்தனம்
ஆடிடும் தில்லைத் தரிசனம்
...நான்காண வைத்தனன் நாயகனே. 9
காணக்கா
ணவென்றன் நெஞ்சுள் நிறைந்த
...களிப்பினில் நான்என(து) என்றுநிதம்
பேணிவந்
தஎன்றன் பித்தமெல் லாம்அந்தப்
...பெம்மான் சிரிப்பில் தெளிந்ததுவே. 10
.. அனந்த்
27-1-2014 (சிதம்பரத் திருத்தலத்திலிருந்து, சோமவாரப் பிரதோஷம்)