Tuesday, January 14, 2014

பாட அருள்வாய்



திருச்சிற்றம்பலம்  


<> பாட அருள்வாய் <>


சல(ம்)மீதெ ழுந்து சிறிதே இருந்து
...சடிதேம றைந்த குமிழ்போல
... சகவாழ்வை என்று முளதாய் நினைந்து
....... சதிகார ரென்று தெரியாமல்

புலனைவர் பின்னர் பொழுதே அலைந்து
... பொதியாக மூளும் வினைசேர்த்துப்
.... பொடியாக மண்ணில் ஒருநாள் விழுந்து
..... புதிதாய்ப்பி றந்து சுழலாமல்

அலைமோது கங்கை மதியோடு  நாகம்
... அணியீசன் நான்கு மறைதேடி
...... அறியாத ஆதி இறையோனை நாடி
........ அனுபூதி பெற்ற அடியார்கள்

உலகோரும் அங்ஙன் உயுமாறு  இரங்கி
....உமைபாகன் மீது பலவாக
... உரைபாடல் தம்மில் ஒருபாட லேனும்
.....உணர்வோடு பாடி உருகேனோ?

 
அனந்த் 14-1-2014

No comments: