திருச்சிற்றம்பலம்
<> ஒட்டிய உறவு <>
பூணுவான் சாம்பல் புசிப்பான் இரந்துணவு
பேணுவான் பெண்ணிருவர் பின்னுமவன் - நாணாய்
அணிவான் அரவம்;நடம் ஆடுவான் காட்டில்
பணிவேன்இப் பித்தன் பதம்.
பேணுவான் பெண்ணிருவர் பின்னுமவன் - நாணாய்
அணிவான் அரவம்;நடம் ஆடுவான் காட்டில்
பணிவேன்இப் பித்தன் பதம்.
திண்டிரள் தோள்உடையோன் திண்டிக்காய் ஓடெடுத்துத்
திண்டாடி யுண்டிடுவான் சிண்டொடுடை - கண்டவரோ
பித்தனென் பார்இரவில் பேயுடனும் ஆடிநிற்பான்
இத்தனைச்சீ ரோன்எம் இறை.
இடமொட்டும் ஓர்பெண் இழிந்தொரு வெள்ளம்
சடையொட்டும் கையொட்டும் ஓடு - மிடற்றில்
விடமொட்டும் காலில் முடக்கொட்டும் இன்னோன்
இடமொட்டு மாம்என் உளம்.
(முடக்கு = வளைவு; நடனமாடத் தூக்கிய காலில் காண்பது; காலடியில் முடங்கிக் கிடக்கும்
முயலகனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்)
... அனந்த்
27-2-2014(மஹா சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்த சிறப்பு நன்னாள்)