திருச்சிற்றம்பலம்
<> காலில்லாத் தெய்வம் <>
காலில்லாத் தெய்வம் களிநடனம் ஆடுவதும்
தோலில்லா மங்கைஅவன் தொங்குசடை நாடுவதும்
பாலில்லா அப்பெம்மான் பால்பத்தர் கூடுவதும்
ஏலும்பார் இங்கே இனிது.
தோலில்லா மங்கைஅவன் தொங்குசடை நாடுவதும்
பாலில்லா அப்பெம்மான் பால்பத்தர் கூடுவதும்
ஏலும்பார் இங்கே இனிது.
24.6.2014
விளக்கம்-
காலில்லாத் தெய்வம்: நகைச்சுவைக் கோணத்தில், தெய்வம் என்னும் சொல், நெடில்எழுத்திலுள்ள ”கால்” குறி இல்லாதிருக்கும்.
உட்பொருள்: கால் என்பது காலம், இடம், அளவு, மூலம் ஆகியவற்றைக் குறிக்கும். இவையாவும் இல்லாப் பரம்பொருளன்றோ நடராசப் பெருமான்?
தோலில்லா மங்கை: இது கங்கையைக் குறிக்கும். மேலெழுந்தவாரியாக இது நதியானஅவளுக்குப் புறத்தோல்/உடல் இல்லை என்பதைச் சுட்டும். உட்பொருள்: தோல் என்பதுதோல்வியைக் குறிக்கும். சிவபெருமானால் அவரது தலைமுடியில் ‘அடக்கப்பட்டவள்’என்பதனால் கங்கை தோல்வியடைந்தவள் என்று கருத வேண்டாம். அடிமுடியில்லாஇறைவனின் தலையில் இடம் பெறும் பேறு பெற்றது பெறற்கரிய வெற்றிப்பேறல்லவோ?மேலும், உமையவளைத் தன் மேனியில் இடப்பாகத்தில் வைத்த பரமன், கங்கையாளைத்தலைமேல் வைத்துக் கூத்தாடுகின்றான் அல்லவா?
பாலில்லாப் பெம்மான்: இது, ஆண்-பெண், உயர்ந்தது-தாழ்ந்தது, அடி-நடு-முடி,இங்கு-அங்கு என்ற பாகுபாடு இல்லாத இறைவனைக் குறிக்கும். ஏலும்- இயலும்.