இன்று பிரதோஷ
நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> நீயும்
நானும் <>
நரையுடை யேன்நான் நீயோ
... நரைவெண் விடையுடையாய்
திரையுடை யேன்நான் நீயோ
...திரைபாய் புனலுடையாய்
வரையுடை
யேன்நான் நீயோ
...வரையில்
உறைவுடையாய்
நிரைநிரை யாய்நான் நின்றன்
...நேரென் றுரைத்திடுமே!
(திரை = தோல் சுருக்கம், அலை; வரை= அளவு, மலை;
; நிரை=வரிசை)
அனந்த்
21-9-2014
---------------------------
தில்லைத் தலத்தினைக்
கண்டவ னைஇன்று
---------------------------
கீழே காணும்
பாடல்கள் நான் அண்மையில் இதய சிகிச்சைக்காக மருத்துவ மனையில் இருந்தபோது மனத்தில் எழுந்தவை:
<>
விந்தை புரிந்தாய்! <>
தில்லியம்*
தன்னையும் காணவைத்தாய் - உன்றன்
தொல்லை இனியெனக்
கேதுமில் லைஆயின்
தொல்லை உனக்குண்(டு)அ(து) என்னவென்றால் - நான்
எல்லைஇல் லாத கருணையி னாலங்(கு)
இருந்திட்ட
காலம்கு றைத்துவைத்தாய்!
கல்லைக் கனியாக்கும் விந்தையி னைஇந்தப்
புல்லியன் கண்முன்நி கழ்த்திவைத்தாய் – யாரும்
ஒல்ல இயலாதவோர் காரியத் தைநீயோ
ஒல்லை புரிந்தென்னைக் காத்துவிட்டாய்!
தொல்லை உனக்குண்(டு)அ(து) என்னவென்றால் - நான்
அல்லும் பகலும்என் நெஞ்சத்தி லேஉன்னை
அடைத்துவைத் தேயங்கே ஆடவைப்பேன்!
(*தில்லியம் = ட்ரில்லியம் (Trillium) என்ற பெயர்கொண்ட டொராண்டோ மருத்துவ மனை; ஒல்லுதல் = ஆற்றுதல், இயலுதல்; ஒல்லை = விரைவு, காலந்தாழ்த்தாமை).
-------------------------------------------------
<> இதயநலம் காப்பாய் <>
பதுமத்தில் அமர்ந்திருந்து படைத்திடுவான் வாணிபதி
மெதுஅரவின் மேலுறங்கிக் காத்திடுவான் பூமகளோன்
இதுமாந்தர் கண்(டு)இயங்கா(து) இராவண்ணம் களிநடனம்
பொதுநடுவில் ஆடிஎன்றும் புரப்பைஎம(து) இதயநலம்!
(புரப்பை = புரப்பாய், காத்திடுவாய்; இதயநலம் = cardiac health)