இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> இதயத்துள் இருப்போன் <>
இதயத் துள்ளே இருந்ததனை
.. இயக்கும் கூத்தா! உன்மகிமைக்
கதையை அன்றி வேறெதுவும்
.. கருதா வண்ணம் அதனைக்காத்(து)
உதயத் தெழுமோர் கதிரவனாய்
.. உன்றன் ஒளியால் விளக்கிஅதை
எதையும் தாங்கும் திறம்படைத்தே
.. இருக்கத் துணைசெய் தருளுவையே!
அனந்த்
6-9-2014
No comments:
Post a Comment