Friday, May 6, 2016

ஆராயவொண்ணாதான்

திருச்சிற்றம்பலம் 



​

1.     <> ஆராயவொண்ணாதான் <>
            
பிட்டுக்கு மண்சுமப்பான் பிண்ணாக்குப் பணியை ஏற்பான்

கொட்டுக்குச் சடைவிரிப்பான் கொட்டுக்கு நடமும் செய்வான்

முட்டுக்கு மேலுடுப்பான் முட்டுக்குத் தாளை ஈவான்

திட்டுக்கு மனங்களிப்பான் தேட்டுக்குள் அடங்காத் தேவே.

 (பிண்ணாக்கு = பிள்நாக்கு; பிளந்த நாக்கு; பணி=பாம்பு; கொட்டு= நீர் சொரிகை, மிருதங்கம் போன்ற வாத்திய ஒலி; முட்டு = முழந்தாள், பற்றுக்கோடு;  திட்டு= சுந்தரமூர்த்திநாயனாரின் வசைச்சொல்; தேட்டு= தேட்டம், ஆராய்வு.)


​

2.  <> மாயா ஜாலம் <>

இடமொரு பெண்ணாகும் ஏந்தும் மிடற்றில்

விடமோர் மணியாய் விளங்கும் - நடத்தில்விழும்

தோடு செவியேறித் தொங்குமொரு தொண்டுகிழ

மாடும் புரவிவிஞ்சு மாம்!



... அனந்த் 4-5-2016

No comments: