திருச்சிற்றம்பலம்
<> பிடித்த பழம் <>
முற்றும் பழுத்தபழம் முனிவர்கள் உண்ணும்பழம்
... முக்திதனை அளிக்கும்பழம் மூளுகின்ற ஆசைவிளை
பற்றை அகற்றும்பழம் பார்வதியாள் பகிர்ந்தபழம்
... பக்தியுடன் உண்போரைப் பரவசத்தில் ஆழ்த்து(ம்)பழம்
குற்றம் களையும்பழம் கொடுத்துவைத்தோர்க்(கு) எந்நாளும்
… குறையாது கிட்டு(ம்)பழம் கூரைக்கீழ்க் கூத்தாடும்
சிற்றம் பலப்பழமிச் சிறியேனின் முற்றாத
.. சிந்தையுளே புகுந்(து)அதனைத் தேங்கனியாய் மாற்றிடுமே.
அனந்த் 16-8-2016
No comments:
Post a Comment