திருச்சிற்றம்பலம்
<> கண்ணாளன் <>
முக்கண்ண னென்றுன்னை மூவுலகம் போற்றுகையில்
எக்கா ரணத்தாலே இன்னுமொரு கண்வேண்டி
அக்கான் உறைவேடன் அக்கோ(டு) அரியவனின்
செக்கர் திருவிழியும் தேவையென்று பெற்றனையோ?
முக்காலும் உன்னை முழுமனத்தோ டேத்திநின்ற
பக்தனை முன்னாள் பரிட்சிக்க அவனிருகண்
ஒக்கப் பறித்துப்பின் ஒவ்வொன்றாய் மீட்டளித்தாய்
எக்காலும் உன்செயலை எம்மால் புரிந்துகொள்ள
வைக்காய்இஃ தேனோ விளம்பு.
(கண்ணாளன் = நண்பன், தலைவன்; அக்கு = கண்;
பாடலில் குறிக்கப்படுவோர், முறையே, கண்ணப்பன், திருமால், சுந்தரமூர்த்தி நாயனார்; பஃறொடை வெண்பா.)
.. அனந்த் 10-3-2017
No comments:
Post a Comment