திருச்சிற்றம்பலம்
<> வேடம் <>
ஏதங்கள் என்னை எடுத்து விழுங்கி டும்
வேதனையில் யான்விடும் ஓலமுன் – காதினுக்கு
எட்டினால் ஈசன்நீ எல்லார்முன் ஆ டுமந்த
நட்டந்தான் நட்டமா மோ? 1
(ஏதம் – துன்பம், நோய்)
மோனம் பயின்று முனிவர்தமக்(கு) ஆலடியில்
ஞானம் புகட்டுமந்த நற்சமயம் – தீனமாய்
ஈனன்யான் இங்கே எழுப்பும் கதறலா ல்
மோனம் முறிந்துபோ மோ? 2
மோதகக் கையன் முருகன் உமையோடு
நாதா!நீ சேர்ந்திருக்கும் நற்றரு ணம் – வேதனையால்
வாடுமென் கூச்சலங்கு வந்துசே ரா ததுபோல்
வேடம் புனையலா மோ? 3
வேட மெடுத்தாய் விறகுவெட்டி யாய் மாடக்
கூடல்நகர்ப் பாணன் குறைதீர்க்க - நாடகத்தில்
வல்லோய்!உன் தாசனென வேடமிட்டு உ ன்னையான்
வெல்லுமுனம் காப்பாய் விரைந்து. 4
விரைகழல் வேந்த!நீ ஏற்கின்ற வேட ம்
விரைவில் கலைந்துனது மெய்யாம் – உருவினைக்
காட்டிக் கொடுப்பதைக் கண்டுளரென் மெய்யுருவை
நாட்டாரெந் நாளுமறி யார். 5
யார்செயிப்பார் ஆயினும் யானேற்கு ம் வேடத்தால்
நேர விழைவதுநின் மெய்யடியைச் – சார்தலன்றோ?
நஞ்சருந்திப் பாரோர் நலம்காத்தோ ய்! என்னுள்ள
வஞ்சம் தவிர்க்கஅருள் வாய். 6
வாய்ச்சொல் செயலெண்ணம் மாறாமல் ஒத்திருக்கும்
வாய்ப்பை எனக்களிக்க மாட்டாயோ? – பேயாடும்
காட்டிலும் உன்னருளைக் காட்டும் கூத் தாடிடுவோய்!
ஓட்டாயென் பொய்ம்மை உரு. 7
உருவில்லா உன்னை உருக்கொண்ட என் னால்
ஒருகாலும் ஆகா(து) உணரப் – பெரு ங்கருணை
கூர்ந்தென்னைச் சீராக்கிக் கூட் டிவைப்பாய் மெய்யடியார்
சேர்க்கையில் யான்திருந்த வே. 8.
(கூட்டிவைத்தல் = வேண்டுவன புரி ந்து நலஞ்செய்தல்; சேர்க்கை= சே ர்க்குதல்; ஒன்றிப்பு.)
வேண்டிநிற்கும் நானும் வெளித்தெரியும் நீயுமெங்கும்
யாண்டும் இருக்கும் அறிவென்று – தாண்டவத்தில்
நீயுணர்த்தும் தத்துவத்தை நெஞ்சில் நிலைநிறுத்தி
ஓயச்செய் என்ஓட்ட மே. 9
(நானும்… அறிவு: இப்பால் நானும் புறத்தே என் கண்கட்குத் தோன்றும் நீயும், இடம், கால வரையில்லாத இருப்பு (’சத்’) பற்றிய அறிவான (’சித்’) ஒன்றே.)
மேன்மேலும் கூட்டும் வினைகள் விளைவிக்கும்
நானாம் அகந்தை நசித்திடக் – கோனுன்றன்
தாளென் அகத்துள்ளே தங்கவைப்பின் வாழுகின்ற
நாளெல்லாம் நன்னாளா மே. 10
அனந்த் 21-7-2017
(அந்தாதி வெண்பாப் பதிகம்)