Wednesday, July 5, 2017

வரமருள்வாய்

                           திருச்சிற்றம்பலம்

                          <> வரமருள்வாய் <> 











நெஞ்சமெ னும்பெருங் காடதி லெள்ளள வேனுமிடம்
..நீங்கலி லாதுநி றைந்துப டர்ந்தெனை வாட்டிவரும்

வஞ்சமு லோபகு ரோதமுங் காமமு மானபுதர்
,, வாடிவ தங்கிம டிந்திட வேண்டிநின் தாளிணையே

தஞ்சமெ னப்புகுந் தேனடி யேனெனைக் காத்தினிமேல்
.. சந்தத முன்நினை வேமன மேவிட நீயருளே

அந்தமி லாவெளி யாகிய சிற்சபை யாமதனுள்
.. ஆதிப ரம்பொரு ளாகவி ளங்கிடு மோர்குருவே.

.. அனந்த் 6-7-2017

No comments: