இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> தொழ அருள்வாய் <>
கரும்பின் தெளிவாய்க் கற்கண் டாய்த்தீங்
.. கனியாய் இனிக்கும் கடலமுதே
…. ககனப் பரப்பே கதிரின் ஒளியே
….. காற்றே நிலனே செவ்விதழில்
அரும்பும் நகையோ(டு) அன்னை காண
.. அழகாய்ப் பொன்னம் பலந்தனில்
…… ஆடி அவளுன் நடத்தைப் புகழ
………..ஆசை கொள்ளும் மணவாளா
விரும்பும் அடியார்க் கெதுவும் தருமோர்
.. வித்தை தெரிந்த விமலாயான்
…… விண்மண் வேண்டேன் விரையார் கழற்கீழ்
……. வீழ்ந்தே கிடக்க வேண்டுவன்இத்
துரும்பின் சிறியேன் துதியால் உன்னைத்
… தொழவும் விழைவேன் அருளாயோ?
…… துரியா தீதப் பரமே ஞானச்
……… சுடரே தில்லைப் பதிவாழ்வே!
.. அனந்த் 30-12-2017 (நன்றியுடன் படம்: சு.ரவி )