இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> கருணை மலை <>
மெய்ம்மலையாய்க் காணருண மாமலையை விட்டிந்தப்
பொய்ம்மலையாய் அலையுமென்றன் புலையுடலை நம்பியி ந்த
வையகத்து வாழ்க்கையினை வீணடித் தேன் ஐய!உனைக்
கையெடுத்துக் கும்பிட்டேன் கடை த்தேறும் வழியருள்வாய்.
தெள்ளியநீர்ப் படிகமெனத் தினமகத்துள் ஒளிருமந்த
உள்ளபொருள் இதுவென்றிவ் வுலகினர்க்குக் காட்டும்மலை
வெள்ளமிழி சடையோன்உன் வெளியுருவாய் விளங்கும்மலை
கள்ளமெலாம் நீக்கிஎன்னைக் காத்தருளச் செய்குவையே.
கண்ணெதிரே காணு(ம்)மலை கடவுளுனை க் காட்டும்மலை
மண்ணிலெமைக் கடைத்தேற்ற வந்துதி த்த இரமணகுரு
பண்ணிசைத்துப் பரவிநின்ற பவித் திரமாம் மலையிதனை
எண்ணிஎனை நானறிய ஈசாநீ அருளுவை யே.
..அனந்த் 29-1-2018
(திருவண்ணாமலையிலிருந்து)