திருச்சிற்றம்பலம்
<> நன்றாமோ? <>
தீவிடம் ஐயன்உன்னைத் தீண்டாமல் காத்தவள்முன்
நீவிடமம் செய்தல் நியாயமோ ஆவியலை
காட்டிலவள் அச்சமுறக் கழுதுகள்முன் ஆடலுமோர்
வீட்டில் விருந்தாகப் பாலகனை வேட்டுவதும்
ஓட்டாண்டி வேடத்தில் ஊரெல்லாம் சுற்றுவதும்
*சேட்டைசெய்து மங்கையர்தம்
செயல்மறக்கச் செய்வதுவும்
சேட்டமுள செய்கைகளோ செப்பு.
(தீவிடம் = தீய விஷம்; ஆவி = சிதையிலிருந்து எழும் புகை; கழுதுகள் = பேய்கள்; சேட்டம் = மேன்மை, பெருமை, திறம், தலைமை- வடமொழி: ச்ரேஷ்டம்)
*முனிவர் மனைவியரைப் பிக்ஷாண்டியாகத் தாருகவனத்திலும், வளையல் வியாபாரியாக மதுரையிலும்
மயக்கிய திருவிளையாடல்களைக் குறிப்பது.)
அனந்த் 18-1-2019 பிரதோஷம்