திருச்சிற்றம்பலம்
<> அட்டிலா அருள் <>
வருந்திநான் வாவென அழைத்திடும் வேளையில் வந்திடா(து) ஏகு வாய்நீ
…. மறந்துபின் உன்நினை வற்றுநான் இருக்கையில் வாசலில் வந்து நிற்பாய்!
அருந்திடப் பானம்நான் அளித்திட வருகையில் ஆங்கிருந்(து) அகன்று செல்வாய்
… ஐயகோ! என்றுநான் அலமரும் போதினில் அருகில்வந் ததனை ஏற்பாய்!
மருந்தள வேனுமோர் புண்ணியம் செய்திடா வறியனேன் தனக்கும் உன்றன்
… மனத்தினில் ஓரிடம் தந்துள(து) அறிந்துநான் எனதுதீக் குணத்தை விட்டுத்
திருந்திட
முயன்றென(து) அகத்தினில் தேவ!நீ அகன்றிடா(து) இருக்க வைப்பேன்
…தீப்பிழம்(பு) ஆனஓர் சோதியின் உருவமாய்த் திகழ்அரு ணாச லத்தோய்!
(14-சீர் ஆசிரிய விருத்தம்)
... அனந்த் 2-4-2019, பிரதோஷ நன்னாள்
No comments:
Post a Comment