திருச்சிற்றம்பலம்
<> வழி காட்டுவாய் <>
நானெனதென் றென்னுள்ளே நாடோறும் அரவொன்று
.. நச்சுமிழ்ந்த வாறிருக்க நானுமதன் மயக்கில்மனம்
போனபடி வாழ்ந்துபிறர் புகல்சொல்லைக் கேளாமல்
.. பொழுதையெலாம் வீணாக்கிப் புன்மையனாய் வாழ்ந்துவிட்டேன்
ஊனுடலம் எரிந்தழியும் ஓரிடத்தில் உலகுதரு
.. ஒருசுகமும் சதமிலையென்(று)
உணர்த்து(ம்)வகை நடம்புரியும்
கோனுனது திருப்பெயரைக் கூறிடவும் தகுதியிலாக்
.. கொடியனெனக் கொருவழியைக் குறிக்கிலையேல் அழிகுவனே.
(எண்சீர் ஆசிரிய விருத்தம், முதற்சீர் கூவிளங்காய் + 7 காய்ச்சீர்)
அனந்த் 13-7-2019 பிரதோஷம்
No comments:
Post a Comment