இன்று பிரதோஷ
நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
<> வரையில்லாப் பரிவு <>
நிருத்தம்
புரியும் நிமலன் எனக்குள்
… நிறைந்தென் பிறவிக்கோர்
அருத்தம் அளித்தான் அவன்இன் னருளை
… அளத்தல் அரிதாம்இவ்
விருத்தன் எழுதும் விருத்தம் தனையும்
.. விழைந்தென் இதயத்தின்
வருத்தம் அகற்றும் வரதன் இவன்சீர்
.. வரைக்குள் அடங்காதே!
அடங்கா மனத்தை அடக்கும் வழியை
.. அருளிப் பவமென்னும்
விடமாம் அதனை விழுங்கிச் செரிக்கும்
.. விதத்தை அறிவிக்கத்
தடமா மலர்நேர் தாளே சரணாய்ச்
… சததம் மனத்திருத்தல்
கடனாம் எனயான் காணச் செய்த
… கருணை வரையிலதே
வரையைத் தூக்க வந்தோன் சிரங்கள்
.. வருந்தும் விதம்தன்கால்
விரலைப் பதித்து வரமும் ஈந்த
.. வேந்தன் அடியேற்குக்
கர(ம்)மேல் தூக்கிக் காவென்று அரற்றும்
.. கலையைப் பயில்வித்துப்
பரமாம் அவனைப் பரவச் செய்த
.. பரிவோர் வரையிலதே.
… நிறைந்தென் பிறவிக்கோர்
அருத்தம் அளித்தான் அவன்இன் னருளை
… அளத்தல் அரிதாம்இவ்
விருத்தன் எழுதும் விருத்தம் தனையும்
.. விழைந்தென் இதயத்தின்
வருத்தம் அகற்றும் வரதன் இவன்சீர்
.. வரைக்குள் அடங்காதே!
அடங்கா மனத்தை அடக்கும் வழியை
.. அருளிப் பவமென்னும்
விடமாம் அதனை விழுங்கிச் செரிக்கும்
.. விதத்தை அறிவிக்கத்
தடமா மலர்நேர் தாளே சரணாய்ச்
… சததம் மனத்திருத்தல்
கடனாம் எனயான் காணச் செய்த
… கருணை வரையிலதே
வரையைத் தூக்க வந்தோன் சிரங்கள்
.. வருந்தும் விதம்தன்கால்
விரலைப் பதித்து வரமும் ஈந்த
.. வேந்தன் அடியேற்குக்
கர(ம்)மேல் தூக்கிக் காவென்று அரற்றும்
.. கலையைப் பயில்வித்துப்
பரமாம் அவனைப் பரவச் செய்த
.. பரிவோர் வரையிலதே.
(விருத்தன் =
வயதுமுதிர்ந்தவன்;வரை = எல்லை; மலை, சததம் = எப்பொழுதும். அறுசீர் விருத்தம்: புளிமா மா மா மா மா காய்)