திருச்சிற்றம்பலம்
<> ஆடலரசன் <>
நடமாடீ கண்ட விடமாடீ பெண்ணோர்
இடமாடீ தீயாடீ என்றன் – உடலாடும்
நெஞ்சத் தடமாடி நீவந்தாங்(கு) ஆடென்று
கெஞ்சுகின்றேன் மன்றாடி கேள்.
(நடமாடீ = நடனம் செய்பவனே; இதுபோல மேல்வரும் விடமாடீ என்பன விளிச்சொற்கள்; ஆடுதல் =
அசைதல், அலைதல், நடஞ்செய்தல், அனுபவித்தல், செய்தல், கலத்தல்,…; கண்ட விடம் = கழுத்தில் விடம் அல்லது காணும் பல இடங்களில்; தடம் = இடம், வெளி..…;
தடனாடி =
தடம்+நாடி; மன்றாடி = குறையிரந்து வேண்டி அல்லது வழக்காடி, (சிவனும் மன்று ஆடி தான்! )
ஈற்றடியில், பின்னிரு சொற்களை இடம்மாற்றிப் (கொண்டுகூட்டிப்) பொருள் கொள்ள வேண்டும்)
ஈற்றடியில், பின்னிரு சொற்களை இடம்மாற்றிப் (கொண்டுகூட்டிப்) பொருள் கொள்ள வேண்டும்)
நீறாடி அன்பர்பொழி நீராடி
அஞ்சடைமேல்
ஆறாடி சீறும் அரவாடி மங்கையொரு
கூறாடி கூத்தாடி கூர்வேற் படையாடி
சீராடி உய்வோம் தெளிந்து.
(முதல் மூன்றடிகளில் ஆடி என்பது பெயர்ச்சொல்லாகவும் ஈற்றடியில் வினையெச்சமாகவும்
பயிலும். ஈற்றடியில், பின்னிரு சொற்களை இடம்மாற்றிப் (கொண்டுகூட்டிப்) பொருள் கொள்ள வேண்டும்.)
அனந்த் 11-9-2019
No comments:
Post a Comment