திருச்சிற்றம்பலம்
<> தீயை எரித்திடும் தீ <>நெஞ்சமாம் காட்டினுள் நினைப்பென நிலைத்தெனை வாட்டிடும் தீப்பி ழம்பே!.. நின்பெரு மாசைகள் நிறைபெற நீணிலம் எங்கும்நான் ஓடி யாடிவஞ்சகம் பேசிநீ வேண்டிய யாவையும் விறகென உன்னி லிட்டும்.. வளர்ந்துமென் மேலும்நீ வானுற ஓங்குத லன்றிமங் கிடுதல் காணா(து)அஞ்சிமேற் செய்வதிங்(கு) யாதென நிற்கையில் அற்பனென் மேலி ரங்கி.. அருணைமா மலையுறை அண்ணல்தன் அடியரின் கூட்டிலே சேர்த்து நானும்உஞ்சிடும் வழியினை உதவினன் இனியும்நீ ஓங்கிடா வண்ண மென்றன்.. உளமவன் ஒளிருநற் சோதியில் உன்னைநான் உருகிடச் செய்கு வேனே.(நீணிலம் = நீள்நிலம், உஞ்சிடும் = உய்ந்திடும்; பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்; அரையடி கூவிளம் விளம் விளம் விளம் விளம் மா தேமா)
..அனந்த் 25-10-2019 பிரதோஷம்
...