திருச்சிற்றம்பலம்
<> ஐயன் திருவுரு <>
தெளிமதுத் தீஞ்சுவை ஊற்றெனத் தோன்றியென்
.. சிந்தையுள் அமுதக் கடலாகக்
களிதரு வீணையின் நாதமாய் என்னுளே
.. கலித்திடும் கான மழையாக
வெளிஒளி மறையினும் உள்ளிருந் தொளிர்ந்திடும்
...விந்தையாம் ஞானச் சுடராக
அளியிலே விளைந்தஎன் ஐயனின் திருவுரு
.. அகத்தினில் என்றும் நிலைகொளுமே
(கலித்தல் = ஒலித்தல், தழைத்தல், எழுதல். எழுசீர் விருத்தம்: கருவிளம் விளம் விளம் விளம் விளம் மா காய்)
அனந்த் 11-10-2019
No comments:
Post a Comment