திருச்சிற்றம்பலம்
<> கூத்தின் இறை <>
மாடு முதுகேற்கும் மந்திரஞ் சொல்லியோர்
<> கூத்தின் இறை <>
மாடூரும் அன்பர் மனமுருகிப் பாடிவைத்த
ஏடூரும் தேகம் எரிந்தழிந்து மாயுமந்தக்
காடூரும் காண்பொருட்கள் ஊடூரும் என்நெஞ்சக்
கூடூரும் கூத்தின் இறை.
மாடு முதுகேற்கும் மந்திரஞ் சொல்லியோர்
ஆடு துதிசெய்யும் ஆங்கொருபேய் – காடடைந்து
பாடும் பதிகம் பரமன் இவனது
மாடு மிகப்பெரிதம் மா!
(மாடு = நந்தியெம்பெருமான், புகழ்; ஆடு = தக்கன், மந்திரம் = சமகம்; பேய் =
காரைக்காலம்மையார்)
அனந்த் 9-11-2011 சனிப் பிரதோஷம்
No comments:
Post a Comment