திருச்சிற்றம்பலம்
<>
அன்பு
தருவாய் <>
தனதான தந்ததன தனதான தந்ததன
தனதான தந்ததன தனதானா
தவமேயி ருந்துபல வகையாக வுந்தொழுது
.. தவறாம லன்புசெய வறியாதே
அவமேகி டந்துழலு மடியேனை யுங்கருதி
.. அரனேயு னன்புதர இசைவாயேற்
கவலாம *லென்றனிகர்
பிறபேரு முன்றனடி
.. கதியாக நம்பியருள் பெறுவாரே
சிவகாம சுந்தரியி னுளமேவி டுங்கணவ
… திருவேந டம்புரியு
மிறையோனே
நவமான சந்தமொடு மயிலேறு முன்புதல்வ
..
னலமேபு கழ்ந்துபல துதிபாடிப்
பவமாயை யின்றியொரு
பரமான வந்தமிகு
..
பதமேய டைந்தவொரு குருநாத
னவனோது விந்தைமிகு கவியா லுளங்குளிரு
..
மதிவீர
மைந்தனுன தொருகாதில்
நவமான வொன்றுசொல வதனா லுவந்தமதி
நதிசூடு செஞ்சடைய வருளாயே.
(*ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது- திருப்புகழ்) )
(குருநாதன் = அருணகிரிநாதர்; அந்தம் = அழகு; நவமான ஒன்று சொல = புதியதான பிரணவ மந்திரப்
பொருளைச் சொல்ல)
பதம் பிரித்து:
தவமே இருந்து பல வகையாகவும் தொழுது
.. தவறாமல் அன்பு செய அறியாதே
அவமே கிடந்து உழலும் அடியேனையும்
கருதி
.. அரனேஉன் அன்புதர இசைவாயேல்
கவலாமல் என்றன் நிகர் பிறபேரும் உன்றன் அடி
.. கதியாக நம்பி அருள் பெறுவாரே
சிவகாம சுந்தரியின் உளம் மேவிடும் கணவ
… திருவே நடம்புரியும் இறையோனே
நவமான சந்தமொடு மயில் ஏறும் உன்புதல்வன்
..
நலமே புகழ்ந்து பலதுதி பாடிப்
பவமாயை இன்றி ஒரு பரம் ஆன அந்தம்மிகு
..
பதமே அடைந்த ஒரு குருநாதன்
அவனோது விந்தை மிகு கவியால் உளம் குளிரும்
..
அதிவீர! மைந்தன் உனது ஒரு காதில்
நவமான ஒன்றுசொல அதனால் உவந்த மதி
நதிசூடு செஞ்சடைய! அருளாயே.
..அனந்த் 19-5-2020 பிரதோஷம்