திருச்சிற்றம்பலம்
என்றுமெம் நெஞ்சினுள் இருப்பென இலங்கிடும் ஈசனே உன்னை எம்மால்
.. எளிதினில் அறிவதற் கியன்றிடா வண்ணமாய் எம்மையிவ் உலக வாழ்வே
நன்றென எண்ணிட நாதநீ வைத்தொரு நகையுடன் தில்லை மன்றில்
… நாட்டியம் ஆடிடும் நயத்தினில் எம்மையாம் மறந்தெம துள்ள கந்தை
சென்றுன காலடி தன்னிலே சிதைந்தழிந் துன்னுடன் சேரக் கண்டோம்
… தில்லையே சிவபத எல்லையென் றிவ்வணம் மெய்ப்பொருள் தெரித்து நிற்போய்!
என்றுமுன் னடிமையான் என்னுமோர் மதர்ப்பிலே ஏழைநான் மிதந்து நிற்பேன்
.. இச்சக வாழ்வினில் எக்குறை வரினுமென்? நீஉளில் இருக்கு மட்டே.
(சென்றுன = சென்று உனது; தெரித்து = தெரிவித்து.)
அனந்த் 13-5-2022
No comments:
Post a Comment