திருச்சிற்றம்பலம்
<> திருவடித் திறம் <>
ஓடுங்கால் உண்டிநிதம் ஏற்றுண்ண; நாரணன்முன்
தேடுங்கால்; மெய்யடியார் தில்லையிலே காணற்கு
நாடுங்கால் நங்கையுமை பார்த்திருக்க மேல்தூக்கி
ஆடுங்கால் அம்பலத்தான் கால்.
<> மலரடி <>
அடிநாள் உனையணுகா அற்பனெனைக் காலன்
அடிநாள் வருமுன் அரனுன் – அடிநாண்
மலரணுக வைத்தென் மனமுலவு மாயா
மலமகலச் செய்தெனை மாற்று.
(நாண் மலர் = நாள் மலர்; உன் நாள் மலர்அடி எனக் கொண்டுகூட்டிப் பொருள் கொள்க.)
<> காலழகன் <>
கால்கள் இரண்டுண்டு காசினியோர் பற்றுதற்கு)அன்
றாலமுண்ட கண்டர்க்(கு) அறிவம்;அவர் – கோலத்தில்
காலொன்று பூணும் கழல்சிலம்பு மற்றுமொரு
காலோ சிலம்பணியும் காண்.
..அனந்த் 7-9-2022 பிரதோஷம்
No comments:
Post a Comment