திருச்சிற்றம்பலம்
<> அன்னை அருள் <>
மன்றில் நடம்புரியும் மாமணியே நின்னன்பர்
..மன்னி உன்னருளை வேண்டிநிற்கும் வேளையிலே
ஒன்றும் அறியேனை என்னருகே வாவெனநீ
.. உந்திக் கொணர்ந்தனைவல் லூழின் பிடிசிக்கிக்
கன்றி வாடிநிற்கும் கடையேன்யான் எனக்குன்றன்
.. கருணை மழைபொழியக் காரணந்தான் என்னேயோ
ஒன்றாய் இரண்டின்றி உன்னுடனே உறைந்திந்த
.. உலகைப் புரந்தருளும் உமையாளின் செயலிதுவே.
<> காட்டுத் தீ <>
வரம்பில்லாக் காட்டுத்தீ யொத்தஎன தகத்தினிலே
பரந்தெரியும் வல்லகந்தைப் பேரனலை நின்விழியில்
சுரந்திடுமுன் பேரருளாம் தூநீரால் அணைத்திடெனக்
கரங்குவித்து வேண்டிநின்றேன் காத்திடுவாய் எம்மானே.
... அனந்த் 21-10-2022