திருச்சிற்றம்பலம்
<> என்றடைவேன்? <>
கண்முன் தெரியும் உலகில் காலம்
... கடிதே விரைதல் தெரிகிறது
எண்ணச் சுமையும் இரவும் பகலும்
... ஏறிக் கொண்டே செல்கிறது
உண்ணும் போதும் உறங்கும் போதும்
... உள்ளே நான்,நான் எனுமுணர்வு
எண்ணந் தாண்டி இருப்பாய் ஒளிரும்
.... எழிலில் அமைதி என்றடைவேன்?
<> ஆலும் அடியும் <>
கல்லாலடிக் கீழமர் தேவ!முன் னாளினில்நீ
கல்லாலடி பெற்றதன் காரணம் ஏதறியேன்
கல்லாவொரு ஏழைஉன் காலினைச் சார்ந்தமைக்கும்
இல்லேனொரு காரணம் இயம்பிட என்னரசே
அனந்த் 7-10-2022
No comments:
Post a Comment