இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> நாணாது ஏற்பாய் <>
தேமா மா மா மா மா புளிமாங்காய்
ஓயா துலகில் பிறந்தும் இறந்தும்
.. உழலும் நிலையகலத்
தூயோர் வகுத்த தொழுகை முறையோர்
... துளியும் அறிந்திலன்யான்
பேயாய் உருக்கொள் பிராட்டி தனக்குப்
… பிறவா வரமளித்தோய்!
நாயேன் எனக்குன் அருளை நல்க
.. நாணா தேற்பாயே!
**********
<> காரணம் அறிவேன் <>
செம்பொன் திருமேனித் தேவ!நீ தில்லையிலே
அம்புநிறை செஞ்சடையோ டாடிடல் - அம்பிகையின்
பாராட்டுக் கிட்டப் படும்பா டெனவறிந்து
சீராட்டு வேனுன் செயல்!
...அனந்த் 31-5-2023