திருச்சிற்றம்பலம்
இன்று பிரதோஷ நன்னாள்
<> குறையும் <>
புலன்வழி ஈட்டும் பொருளறி(வு) ஒன்றால்
… பொருந்திடும் வினையி ரண்டால்
மலமொரு மூன்றின் வசத்தினில் சிக்கி
… வாடுமென் நிலைய றிந்தும்
சலமொடு மதியைச் சடையணி ஈசா
… சற்றுமோர் தயவி லாமல்
பலர்முனம் ஆடும் பரிசினில் ஆழ்ந்தால்
.. பாவியெற் கேது நாதி?
(பரிசு = பெருமை, தன்மை, கொடை)
🌸🌻🌺
<> நிறையும்
<>
பெருமா னுன்றன் பெருமையெலாம்
.. பேசக் கேட்டும் உனைநெஞ்சுள்
ஒருபோ தேனும் நினையாமல்
.. உறங்கிக் கிடந்த ஒதியனுன்றன்
திருமுன் வருமா றருளியவுன்
.. செயலை எவ்வா றியம்புவனே
ஒருமா தருகில் பார்த்திருக்க
.. ஒருகால் உயர்த்தும் நடத்தரசே
🌸🌻🌺
No comments:
Post a Comment