இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<>
விசித்திரத் திருடன் <>
இருளில் திரிந்து
பொருளைத் திருடும்
…. இயல்சேர்
கள்வர் கண்டுள்ளேன்
இருளில் நடமா டொருவன்
மாறாய்
…. என்றன் அகத்துள்
தான்புகுந்தே
இருளைத் திருடி இணையில்
சிவமாம்
…. பொருளை விட்டுப்
போயினனே!
அருளின் வடிவோன் அழகார்
தில்லை
…. அரசன் செயலை
ஆரறிவார்?
.. அனந்த்
15-6-2023
No comments:
Post a Comment