திருச்சிற்றம்பலம்
இன்று பிரதோஷ நன்னாள்
<> ஆட்டுவித்தான் <>
உலக மென்னும் மேடையிலே
.. உவகை யுடனே ஏறிநின்று
பலவாய் அங்க அசைவுகளைப்
.. பாங்காய்க் காட்டிப் பரிசுபெற்றும்
அலந்தேன் உடலம் தளர்ந்துநிதம்
.. அழுதல் விட்டுப் புலியூர்அம்
பலவன் என்னை ஆட்டுவிக்கப்
… பெற்றேன் இனியோர் துயரிலனே.
(அலந்தேன் = துன்பப்பட்டேன்)
... அனந்த் 13-8-2023
No comments:
Post a Comment