இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> புலியூர்த் துரை <>
முழங்கிடும் துடியொடும் முடியணி மதியொடும்
…. முத்தொழில் புரிந்து ஞானம்
வழங்கிடும் கரத்துடன் மன்றினில் நடமிடும்
.. வள்ளலே அடியர் உள்ளப்
பழங்குடில் தொறுமெழுந் தருளுமெய்ப் பொருளுன
.. பாங்கினைப் பகரல் ஆமோ?
செழுங்கதிர் எனவொளிர் சிவபுரத் தரச!எம்
.. செல்வமே புலியூர்த் தேவே!
(பொருளுன = பொருள் உனது)
…………….. அனந்த் 12-9-2023
No comments:
Post a Comment