திருச்சிற்றம்பலம்
இன்று பிரதோஷ நன்னாள்.
<> உனது நாடகம் <>
நானென தெனுமிரு
நாண்களைக் கொண்டு
மானிடர் தம்மை ஊனொடு பிணைத்துப்
புலன்களின் அடிமையாய்ப் புவியில் பிறப்பித்(து)
அலைந்திடச் செய்(து)அவர் அவதிபல பட்டாங்(கு)
உலைந்தும் எய்த்தும் உலவிட வைத்(து)அவர்
கலங்கிய மனத்தராய்க் கதறிடுங் காலுன்
காலை அவர்முன் காட்டி அவர்தமை
இன்முகத் தோ(டுநீ ஈர்த்திதைப் பற்றென
நன்னெறி காட்டி நாடகம் ஆடுவ(து)
ஏனெனக் கேட்க மானிகர்
விழியளே
வாய்திற
வாளெனின் யார்பால்
போயிதைக் கேட்போம் புகல்வாய் நீயே!
..
அனந்த் 26-10-2023